களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். களுதாவளை மாகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள நீர் வடிகான் ஒன்றினுள் வோன் குடை சாய்ந்ததில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது. இவ் விபத்தில் காயமடைந்தவர் வென்னப்புவ எனும் பிரதேசத்தினைச் சேர்ந்த 40 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments