களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் சற்று முன் கார் ஒன்று விபத்துக்குள்ளானது. களுவாஞ்சிகுடி பிரதான வீதியின் வீரபத்திரர் ஆலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மோட்டர் வண்டி ஒன்று வீதியினை கடக்க முற்பட்ட போது பின்பக்கமாக வந்த கார் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் அருகிலுள்ள கால்வாய் கட்டில் மோதி வளவொன்றினுள் புகுந்துள்ளது. காரில் பயணித்த இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியதோடு இருவரும் மயிரிழையில் உயிர்தப்பினர். மோட்டார் வண்டி சாரதி அவ்விடத்தில் தரித்து நிற்காமல் தப்பிச் சென்றுள்ளார் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments