தனது மார்பகங்களை பெரிதாக்க சுயமாக வெசலீன் களிம்பை ஏற்றிக்கொண்ட பெண்ணொருவர் நுரையீரலில் இரத்தம் உறைந்து கட்டியாகி பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிய சம்பவம் ஆர்ஜென்ரீனாவில் இடம்பெற்றுள்ளது.
சோனியா பெரெஸ்லலான்ஸன், (39 வயது) என்ற மேற்படி பெண் தலைநகர் புயனர்ஸ்அயர்ஸிலிருந்து தென்மேற்கே 350 மைல் தொலைவில் சாந்த ரோஸா நகரிலுள்ள லூசியோமொலாஸ் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
தனது அழகை மெருகுபடுத்துவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வந்த சோனியா தனது மார்பகங்களை மேலும் கவர்ச்சிகரமாக மாற்ற வெசலீனை அவற்றில் ஏற்றிக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து கடும் சுவாசப் பிரச்சினைகளுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஒரு மாத காலமாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
மனித உடல் பற்றீரியா, வைரஸ் என்பவற்றை அகற்று வதற்கு இயற்கை முறையில் பிறபொருள் எதிரிகளைக் கொண்டுள்ள போதும் வெசலீன் போன்ற பொருட்களை அகற்றுவதற்கான பொறிமுறையை அது கொண்டிருக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெற்றோலியத்தை உள்ளடக்கிய வெசலீனை ஆண்கள் தமது பிறப்புறுப்பை பெரிதாக்க ஏற்றிக்கொள்வது அதிகரித்து வருகின்றமை குறித்து ஏற்கெனவே மருத்துவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments