Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம் .ஒருவர் கைது

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கொடுவாமடுவிலில் இன்று (28) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயதுச் சிறுவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரகுகரன் விதுர்ஷன் என்ற சிறுவனே கொல்லப்பட்டவராகும்.
கொடுவாமடுக் கிராமத்தின் உள் வீதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு நின்ற போது அந்தப்பகுதியால் வேகமாக வந்த உழவு இயந்திரம், சிறுவன் மீது ஏறிச் சென்றதாக கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது செங்கலடி வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக கிராம சேவையாளர் எஸ். கோகுலராஜ் தெரிவித்தார்.

உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments