இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக எந்தவகையிலும் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் அழுத்தங்களை வழங்கி வருகின்றன.
எனினும் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்து வருகிறது.
எவ்வாறாயினும் சர்வதேசம் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேர்மையான உள்நாட்டு விசாரணை ஒன்றை மேற்கொண்டு, அந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை நிரூபிக்குமாறு, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அறிவுறுத்தி வருவுதாக ஜுலி பிசப் தெரிவித்துள்ளார்.
எனினும் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு தமது அரசாங்கம் ஆதரவளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments