Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாங்கள் யாரும் பயங்கரவாதிகள் இல்லை - சீ.வி.விக்னேஸ்வரன்

பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் இராணுவப் புலனாய்வு தரப்பினர் தொடர்ந்தும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

பிபிசி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தினர் குறைக்கப்பட்டிருப்தாகவும் பல காவல் அரண்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது வரவேற்க வேண்டிய விடயம் எனினும். காவல் அரண்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் நாளாந்தம் சைக்கிளில் வருகின்ற இராணுவ புலனாய்வு பிரிவினர் அங்கு கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். 

வட மாகாணம் பயங்கரவாதிகளின் பிரதேசம் என்ற மனநிலையில் இராணுவத்தினரும், அரசாங்கமும் இருப்பதே இதற்கான காரணம். 

அதனாலேயே அவர்கள் தொடர்ந்து வடமாகாணத்தையும்ää கிழக்கு மாகாணத்தையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். 

ஆனால் நாங்கள் யாரும் பயங்கரவாதிகள் இல்லை என்று சீ.வீ.விக்னேஸ்வரன் தமது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments