மத்திய பிரதேச மாநிலம்,இந்தூர் அருகே நள்ளிரவில் உறங்கிகொண்டிருந்தவரை பாம்பு கடித்தது.மேலும் அது,அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல விடாமல் வழிமறித்து நின்றதால் அவர் சிகிச்சை பெற வழியில்லாமல் உயிரிழந்தார்.
இந்தூர் அருகே உள்ள அமருஜாலா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.அங்கு ஒருவர் தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.அப்போது நள்ளிரவில் ஒரு பாம்பு அந்த நபரை கடித்துள்ளது. இதை அடுத்து அவரது மனைவி தனது கணவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முயன்றார்.
ஆனால்,அந்த பாம்பு அவர்களை மறிப்பது போல் வாசலில் நின்று கொண்டது.இதனால் அதிகாலை வரை வீட்டை விட்டு அவர்களால் வெளியே வர முடியவில்லை. வேறு வழியில்லாமல் தனது கணவரை காப்பற்றுவதற்காக வீட்டுச் சுவரை உடைத்து கணவரை வெளியே கொண்டு வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் அவரது மனைவி.
ஆனால் பலனில்லை.அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஒரு பாம்பு கடித்ததோடு நில்லாமல்,அவரை காப்பற்றவும் விடாமல் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments