Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முகப்புத்தக சர்ச்சை: சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரி அதிபர் இடமாற்றம்

முகப்புத்தக சர்ச்சையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரியின் அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் பணிப்பில் அதிபர் தற்காலிகமாக குருநாகல் வலய கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


மாணவி விடயத்தில் அதிபர் நடந்து கொண்ட விதம் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் சமன் இந்திரரத்ன கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments