கல்முனை தரவை பிள்ளையார் வீதியினை கடற்கரை பள்ளிவாசல் வீதியாக மற்றுவதனை எதிர்த்து அப்பகுதி வாழ் தமிழர்களினால் அமைதி பேரணி ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்முனையில் உள்ள விகாரையின் விகாராதிபதி, பொது அமைப்புக்கள், சிவில் சமூகம், த.தே.கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் பெண்கள் அமைப்புக்கள் விளையாட்டுக்கழகங்கள் அனைத்து இணைந்து இவ்வார்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.
இன்று கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட அமைதிப் பேரணியானது கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியினூடாக கல்முனை மாநகரசபையினை சென்றடைந்து, அங்கு மேயர் இல்லாமையினால் மகஜரினை ஆணையாளரிடம் கையளித்தார்கள். பின்னர் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திற்குச் சென்ற அமைதிப் பேரணியானது, பிரதேச செயலாளர் நௌபலிடம் மகஜரினை கையளித்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோட்டுக்கொண்டார்கள்.
இறுதியாக தமிழ் பிரதேச செயலகத்திற்குச்சென்று நிருவாக உத்தியோகத்தரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இதன்பின்னர் அமைதிப் பேரணியை முடித்து வைத்து உரையாற்றிய முன்னால் மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர் கென்றி மகேந்திரன், இந்தப்பேரணிக்கான நல்ல முடிவினை உரியவர்கள் எடுக்கவேண்டும். அப்படி இதில் அதிக கவனம் செலுத்தத்தவறின் கல்முனை வாழ் ஒட்டுமொத்த தமிழர்களையும் அணிதிரட்டி பாரிய போராட்டம் ஒன்றினை நடத்தி தீர்வினை பெறக்கூடிய நிர்ப்பந்தம் உருவாகும் என்றார்.lw10214
0 Comments