பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிதைந்த சடலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
இப்பல்கலைக்கழகத்தின் கலைத் துறை மாணவனான 24 வயது கே. நிஷாந்த என்பவரே இறந்து உள்ளார்.
இவரை கடந்த 26 ஆம் திகதி முதல் காணவில்லை என்று உறவினர்கள் தேடி வந்து உள்ளனர்.
2011 ஆம் ஆண்டு புதிய மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்களால் நடத்தப்பட்ட பகிடிவதை சம்பவத்தின் பிரதான சாட்சி இவர் ஆவார்.
இந்நிலையில் இவரது மரணம் தற்கொலையா? படுகொலையா? என்று பொலிஸார் துப்பு துலக்குகின்றார்கள்.
0 Comments