கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வான் ஒன்று பழைய முறிகண்டி கோயில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிப்போ ஒன்றுடன் இன்று அதிகாலை 3.00 மணி அளவில் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 06 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து உள்ளனர்.
விபத்துக்கு உள்ளான வானில் சடலங்களின் உடல் பாகங்கள் சிதைந்து காணப்பட்டன. இவை அப்புறப்படுத்தப்பட்டு, சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
07 வயது சிறுவன், 07 வயது சிறுமி ஆகியோரும் இறந்து இருக்கின்றனர்.
நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் இறந்து உள்ளார்.
விபத்து தொடர்பாக வான் சாரதி கைது செய்யப்பட்டு உள்ளார்.
மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முடுக்கி விட்டு உள்ளார்கள்.
0 Comments