மட்/எருவில் கண்ணகி மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியானது இன்று (2014.02.11) இன்று காலை 09.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் கோ. கயிலாயபிள்ளையின் தலைமையில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ந. புள்ளநாயகம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், விசேட அதிதியாக ம.தெ.எ.பற்று பிரதேச செயலாளர் மு. கோபாலரெத்தினம் அவர்களும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டது.
0 Comments