Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கணனி வர்த்தகத்தை கைவிடும் SONY

கணனி வர்த்தகத்தை கைவிடுவதோடு 5,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சோனி நிறுவனம் முடிவெடுத்துள்ளது.இதுகுறித்து சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனி நிறுவன தயாரிப்புகளான பிராவியா தொலைக்காட்சி, காணொளி விளையாட்டு, பிளே ஸ்டேஷன் உள்ளிட்டவைகளை உலகம் முழுவதும் மக்கள் ஆவலுடன் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் தென் கொரிய தயாரிப்பான சாம்சங் போன்றவைகள் உலக சந்தைக்கு பெருமளவுக்கு வந்ததைத் தொடர்ந்து சோனி நிறுவனத் தயாரிப்பான கணனி விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் சோனி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.6,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே சோனி நிறுவனத்தின் கணனி தயாரிப்பு உடனடியாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.மேலும் சோனியின் கணனி தயாரிப்பை ஜப்பானை சேர்ந்த ஜேஐபி நிறுவனத்துக்கு கணிசமான விலைக்கு விற்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து சோனி நிறுவனத்தின் கணனி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பானை சேர்ந்த 1,500 பேர், மற்ற நாடுகளில் உள்ள 3,500 பேர் உள்பட 5,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.இவர்களை சோனி நிறுவனத்தின் கணனி தயாரிப்பு பிரிவை வாங்கும் புதிய நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், அவர்களை சோனி நிறுவனத்தின் மற்ற தயாரிப்பு பிரிவுகளில் பணியமர்த்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.மேலும் சோனி நிறுவனத்தின் கைப்பேசி மற்றும் காணொளி விளையாட்டு உள்ளிட்ட வர்த்தகத்தை பெருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் இதுபோன்ற தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தவும் பணியார்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments