களுதாவளை பிள்ளையார் ஆலய கல்வி அபிவிருத்தி நிதிய அங்குரார்ப்பண நிகழ்வானது இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. இந் நிகழ்விற்கு களுதாவளை பிள்ளையார் ஆலய நிர்வாக சபைத் தலைவர் த. வேல்வேந்தன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்து கொண்டார். மீள் குடியேற்ற அமைச்சரின் பிரத்தியேக இணைப்பாளர் பொன் இரவீந்திரன் கலந்து கொண்டு இந் நிகழ்வைச் சிறப்பித்திருந்தார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கே. கோபாலரெத்தினம் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். அதிதிகள் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மேளவாத்தியங்கள், பட்டாசுகள் முழங்க ஊர்வலமாக அழைத்துவரப்பட்மை சிறப்பான அம்சமாகும்.
இந்த நிகழ்விற்கு பெருந்தொகையான பொதுமக்கள் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கு களுதாவளை கல்வி அபிவிருத்தி சபை 2012, 2013ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி அதன் பணி மீள்குடியேற்ற அமைச்சினால் தொடக்கிவைக்கப்பட்டது.

0 Comments