அக்கரைப்பற்று நகர் மணிக்கூட்டு கோபுரத்தின் மணிக்கூடு அமைந்திருந்த பகுதியில் மணிக்கூட்டுக்கு பதிலாக மாநகரசபை மேயர் அதாவுல்லா சக்கியின் நிழல்படம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நேரத்தை பார்க்க முடியவில்லையே என ஆதங்கப்பட்டு அந்த நிழல் படத்தை அகற்றிவிட்டு மணிக்கூட்டை மீண்டும் பொருத்துமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்த போது அப்படத்தை அகற்ற முடியாது எங்கள் முகத்தில் நேரத்தை பார்க்கலாம் என அதாவுல்லாவும், அவரது மகன் சக்கியும் கூறியுள்ளனர்.
மணிக்கூட்டு கோபுரம் பொதுமக்கள் நேரம் பார்க்க அமைக்கப்பட்ட பொதுக்கட்டிடம் ஆகும். இருந்தபோதும் இவ் மணிக்கூட்டு கோபுரத்தை புனர்நிர்மாணித்து மணிக்கூட்டை இயங்கவைத்து பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாவர்.
இருந்தும் வேலியே பயிரை மேய்ந்தது போல அடாவடித்தனமாக நடந்து கொள்ளும் அமைச்சர் அதாவுல்லா மற்றும் அவரது மகன் சக்கி ஆகியோரின் நடத்தைகள் காணப்படுவதாக அக்கரைப்பற்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த கோபுரத்தின் மணிக்கூடு ஓடுமா ? அல்லது அதாவுல்லாவின் மகன் சக்கியின் முகத்தில் தான் நேரத்தை பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடருமா என அக்கரைப்பற்று பொதுமக்கள் அங்கலாய்கின்றனர்.



0 Comments