மும்பையில் உள்ள ஒரு தெருவில் நின்று கொண்டிருந்த காரின் உள்ளே நடிகை அசின் பிரபல தொழிலதிபருடன் நெருக்கமாக இருந்ததாக இணையதளங்களில் புகைப்படம் வெளியாகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை அசின், மும்பை பக்ரா என்ற தெருவில் நின்று கொண்டிருந்த ஒரு காரில் பிரபல தொழிலதிபருடன் நெருக்கமாக இருந்ததை ஒரு போட்டோகிராபர் தற்செயலாக பார்த்துள்ளார். உடனே அவர் தன் கையில் இருந்த கேமாராவின் மூலம் புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரினுள் அசின் தொழிலதிபரை கட்டிப்பிடித்து முத்தமிடுவது போன்று இருக்கும் அந்த புகைப்படம் பல இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
முதலில் புகைப்படம் எடுப்பதை இருவருமே கவனிக்கவில்லை. பின்னர் தாமதமாக சுதாரித்துக்கொண்ட இருவரும் காரில் மிக வேகமாக சென்றுவிட்டனர். தற்போது மும்பை பத்திரிகையாளர்கள் அந்த தொழிலதிபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
0 Comments