Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஒன்பது வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 53 வயது நபருக்கு விளக்கமறியல்.

திருகோணமலை மயிலங்குடா பகுதியில் 9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து, மார்ச் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் 52 வயதானவர் எனவும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறுமி தனியாக வீட்டிலிருந்த போது நேற்று காலை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments