Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பகுதியில் ஹோமியோபதி வைத்திய சகிச்சை முகாம்


ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் மாற்று மருத்துவமுறைகள் எனும் தெனிப்பொருளின் கீழ் ஹோமியோபதி வைத்திய சகிச்சை முகாம் ஒன்று இன்று (19) மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை மகாத்மா காந்தி நிலையம், சிலோன் ஹோமியோபதி மெடிக்கல் அஸோஸியேசன், வடக்கு கிழக்கு நல்லிணக்கத்திற்கான சர்வமத ஒன்றியம் , ஆகிய பங்காள அமைப்புக்ளுடன் இணைந்து கதிரவன் அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் 'முஸ்லிம் எய்ட்' நிறுவனம் இதனை நடாத்தியிருந்தது.

கதிரவன் அமைப்பின் அமைப்பின் தலைவர் ப.இன்பராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பரியா-வில்வரெத்தினம், முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் முகாமையாளர் ரி.சலீம் அப்துல், இலங்கை மகாத்மா காந்தி நிலையத்தின் தலைவர் எம்.ஏ.எம்.சலீம், மற்றும் ஆலய மதகுருமார் பொதுமக்கள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

ஹோமியோபதி வைத்திய சகிச்சை நிபுணர்களான வைத்தியர் எஸ்.விஜயநாயகம், வைத்தியர் பிரேமதாச ஆகியோர் கலந்து கொண்டு இதன்போது மக்களுக்கு ஹோமியோபதி வைத்திய சிகிச்சையின் பலாபலன்கள்  பற்றி விளக்கமளிக்கப்பட்டதோடு. சிகிச்சையும் வழங்கினர்.

இப்பகுதி மக்களன் நலன் கருதி மாதாந்தம் இவ் வைத்திய சிகிச்கை முகாம் மேற்கொள்ளத் திட்மிடப் பட்டுள்ளதாக முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் முகாமையாளர் ரி.சலீம் அப்துல், அவர்கள் இதன்போது தெரிவித்தார்.







Post a Comment

0 Comments