Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நகைச்சுவை நடிகர் குள்ளமணி சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமானார்.

நகைச்சுவை நடிகர் குள்ளமணி சென்னையில் நேற்று இரவு 9 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு (வயது 65). கரகாட்டக்காரன், பில்லா, இணைந்த கைகள் உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் குள்ளமணி. இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு 9 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணமடைந்தார். அவருடைய உடல் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள மரமடக்கி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு இன்று (வியாழக்கிழமை) உடல் அடக்கம் நடக்கிறது. மறைந்த நகைச்சுவை நடிகர் குள்ளமணிக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments