Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் இனந்தெரியாதோரால் புத்தர் சிலை சேதம்

மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் தனியார் காணியொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டு வீசப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். புத்தர் சிலை கீழே வீசப்பட்டுக் கிடப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்தே சேதமாக்கப்பட்ட சிலையின் பாகங்களை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழையிலிருந்து அது வெளியே எடுத்து வீசப்பட்டதில் சிலை பல பாகங்களாக நொருங்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சிலையின் பாகங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் பௌத்த மக்கள் எவரும் இல்லாத போதிலும், போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அங்கு நிலை கொண்டு முகாமிட்டிருந்த படையினரும் பொலிஸாரும் குறித்த புத்தர் சிலையை அங்குள்ள தனியார் காணியொன்றில் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments