Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை தேசியக் கொடியிலிருந்து வாளேந்திய சிங்கம் நீக்கப்பட வேண்டும்!- விக்ரமபாகு கருணாரட்ன

இலங்கையின் தேசியக் கொடி மாற்றியமைக்கப்பட வேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். இலங்கையின் தேசியக் கொடியில் இருக்கும் சிங்கம் நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக விவசாயின் உருவமோ வேறு பொருத்தமான உருவமோ பொறிக்கப்பட வேண்டும் என விக்ரமபாகு குறிப்பிட்டார். இலங்கையின் தேசியக் கொடி நாட்டில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என வடக்கு மாகாண விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பீ. ஐங்கரநேசன் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக மன்னாரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் தேசிய கொடியை ஏற்ற மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments