சென்னையில் பணத்துக்காக கடத்தப்பட்ட தனியார் கல்லுரி மாணவியை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருங்களத்தூர் பகுதியில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவியை, அவளது செல்போன் டவரை வைத்து காவல்துறையினர் கண்டுபிடித்து மீட்டனர்.பணத்துக்காக மாணவியை கடத்திய எல்ஐசி ஏஜெண்ட் பழனிச்சாமி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமது வாடிக்கையாளர்களில் பணக்காரர்களாக இருப்போரின் பிள்ளைகளை கடத்தி பணம் பிடுங்கும் நோக்கத்தில் பழனிச்சாமி இதில் ஈடுபட்டுள்ளான். கடத்தப்பட்ட மாணவியின் தந்தை பிரபு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments