Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நயக்ராம் என்ற ஒரு கிராமத்தையே ஓட ஓட கலைத்த 150 காட்டு யானைகள்!

மேற்கு வங்க மிட்னாப்பூர் மாவட்ட நயக்ராம் பகுதி கிராமங்களுக்குள் நேற்று 150 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று நுழைந்தது. பின்னர், கெசரெக்கா கிராமத்தில் இருந்த குடிசைகளை இடித்து தள்ளின. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஊரை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிவிட்டனர். குறித்த பகுதியில் விளைந்திருந்த நெற்பயிர்களை இந்த யானைகள் கூட்டம் நாசம் செய்தன. குட்டிகளுடன் உலா வரும் இவ்வளவு பெரிய யானை கூட்டத்தை கண்ட வனக்காவலர்களும், யானைகளை விரட்டும் ஹ்ல்லா குழுவினரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இதையடுத்து நள்ளிரவே யானைகளை அங்கிருந்து அதன் இருப்பிடங்களுக்கு விரட்டும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. குளிர்காலங்களில் இப்பகுதியில் விளைவிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை உண்ண யானைகள் வருவது வழக்கம். ஆனால், இந்த மிகப்பெரிய கூட்டம் ஜார்கண்ட் மாநில தபோகான் மலைக்காடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Post a Comment

0 Comments