Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 08வது ஆண்டு நினைவுதினம் (படங்கள்)

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் எட்டாவது ஆண்டு நினைவுதினம் இன்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சேயோன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தலைவர்கள், உறுப்பினர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரின்ஸ் காசிநாதர், த.கனகசபை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் சிவயோகச்செல்வன் சிவஸ்ரீ சாம்பசிவ குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.


Post a Comment

0 Comments