யாழில் இன்று காணாமல்போனவர்கள் ஒன்று கூடி தங்கள் உறவுகளை மீட்டுத் தரும்படி கண்ணீர் மல்க போராட்டம் நடாத்தியுள்ளனர். இந்தப் போராட்டமானது நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பதாக நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கடந்த காலத்தில் உறவுகளை இழந்தவர்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க ஆர்ப்பரித்தனர். சிறுவர்கள் பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் என உறவுகளை இழந்தவர்களின் கூக்குரலால் யாழ்.நல்லூர் பகுதி அதிர்ந்தது. ஓவென்று கதறல் சத்தம் வானம் பிளந்த நிலையில் உறவுகளின் கண்ணீர் போராட்டமே சோக மயமாகியது. இந்த போராட்டங்களில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், மாவை சேனாதிராசா உள்ளிட்ட பல தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
|
இந்தநிலையில், மக்களின் போராட்டங்களை தடுத்து நிறுத்தி கடும் சோதனை நடவடிக்கைகளை இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள் மேற்கொண்டதோடு, ஆங்காங்கே மக்களை அச்சுறுத்தும் செய்ற்பாடுகளையும் மேற்கொண்டனர்.
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
0 Comments