'3' படத்தில் நடித்த போது தனுஷும், சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
'என் தம்பி சிவகார்த்திகேயன்' என்று தனுஷ் பெருமையாக மேடைகளில் சொன்னார்.
தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த 'எதிர்நீச்சல்' படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.சிவகார்த்திகேயனின் சினிமாவில் மிகப் பெரிய உயரத்தை அடைய பெரிதும் உதவியது.
அதனாலேயே தனுஷை தன் மானசீக அண்ணனாக் கருதுகிறார், சிவா.
சமீபத்தில், சிவகார்த்திகேயனுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தனுஷிடம் கேட்டிருக்கிறார்.
ஆராதனா என்று பெயர் வைக்குமாறு தனுஷ் சொன்னதும், 'அப்படியே செய்கிறேன்' என்று திருவாய் மலர்ந்தாராம். சிவாகார்த்திகேயன் மகள் இப்போது ஆராதனா என்று கொஞ்சப்படுகிறார் .
0 Comments