Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழ்ப்பாணம் சென்று திரும்பிய பிரித்தானியப் பிரதமர் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார்!

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.இன்று மாலை சுமார் 7.10 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த நிலையத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் காலையில், நடந்த கொமன்வெல்த் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வையடுத்து, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன், அங்கிருந்து திரும்பியதும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பேசினார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தனியாக சந்தித்து, மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்த அழுத்தம் கொடுக்கப் போவதாக, டேவிட் கெமரொன் முன்னர் தெரிவித்திருந்தார். மேற்படி சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

Post a Comment

0 Comments