தமிழர்களை என்ன பந்தாக நினைத்தா பந்தாட நினைக்கிறார் முரளிதரன். அண்மையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் சனல் 4 ஊடகவியலாளர்களுடன் கருத்து தெரிவித்த முரளி தமிழர்களுக்கு நடந்த உண்மையான அநீதிகளை மூடி மறைத்து அரசுக்கு சார்பாக கருத்து வெளியிட்டதை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் மு. இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
|
வடகிழக்கு தமிழர்கள் மட்டுமல்ல இலங்கை முழுவதும் வாழ்கின்ற தமிழர்கள் ஏன் உலகமே இன்று இவரது கருத்தை வன்மையாக கண்டிக்கின்றது. ஒருவருக்கு "சொந்தப்புத்தி வேண்டும் அல்லது சொல் புத்தி வேண்டும்" இந்த இரண்டுமே இல்லாத தமிழன் என்று தன்னை வெளியுலகுக்கு காட்டிக்கொண்டிருக்கின்ற முரளிதரன் எப்படி தான் ஒரு தமிழன் என்று எங்களை ஏமாற்ற வேண்டும்.
இவருக்கு என்ன அருகதை இருக்கின்றது எமது தமிழ் மக்களை பற்றி பேசுவதற்கு அரசாங்கத்திற்கு துதி பாடி காக்காய் பிடித்து அவரது வாழ்க்கையை உயர்த்த வேண்டுமானால் அதற்கு எத்தனையோ வேறு வழிகள் இருக்கின்றது அதற்காக எமது மக்களின் கடந்த கால நிகழ்கால துயரங்களை அடமானம் வைக்க முயலக்கூடாது. இவர் எமது மக்களை பார்த்து தான் தனது பிழைகளுக்கு மன்னிப்பு கோரினால் கூட அவரை அவரது கருத்தை ஏற்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. இவருக்கு இவரது கருத்துக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டங்களை நடத்தவும் நாங்கள் தயாராகவும் உள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.
|
0 Comments