வெலிக்கந்தையில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி ஊறணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இன்று காலை மூன்று பேர் வெலிக்கந்தையில் உள்ள குளம் ஒன்றில் படகில் சென்றுகொண்டிருக்கும்போது படகு கவிழந்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் நீந்தி தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் மட்டக்களப்பு ,ஊறணி பேச்சியம்மன் ஆலய வீதியை சேர்ந்த ஜோர்ஜ் தனுசாந்த்(22வயது)எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் மட்டக்களப்புக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிக்கந்தை பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments