Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் பல்திறன் ஆக்கக் கண்காட்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கன்னங்குடா மகாவித்தியாலய பல்திறன் ஆக்கக் கண்காட்சியொன்று இன்று (18) இடம்பெற்றது.

 பாடசாலை அதிபர் தி.புலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இக் கண்காட்சியில் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) ஞா.சிறிநேசன், மண்முனை மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கணேசு உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கிராம அமைப்புக்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ நிறுவனத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய தலைமைத்துவப் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களை முன்னிலைப் படுத்தி இக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments