அறுபது லட்ச ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட பௌத்த பிக்கு ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்தியாவிற்கு யாத்திரை அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய நபர்களிடம் பாரியளவில் பணம் சேகரிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சவாஸ்திபுர அதரஎல பிரதேச விஹாரை ஒன்றைச் சேர்ந்த பௌத்த பிக்குவே இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பௌத்த பிக்குகள் மற்றும் மக்களிடம் தலா 30000 ரூபா முதல் பணம் திரட்டியுள்ளார். திரட்டிய பணத்தை வாகனங்களுக்காக குத்தகைக் கொடுப்பனவிற்காக குறித்த பௌத்த பிக்கு செலுத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பௌத்த பிக்கு தேடப்பட்டு வருவதாகவும், அனுராதபுர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments