Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

2014ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் - நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறார் ஜனாதிபதி!

2014 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாளை மறுதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2014 நிதியாண்டிற்கான செலவினங்களுக்கு 154,252 கோடி 25 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாளை மறுதினம் பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று மாலை இடம்பெற உள்ளது. குழு நிலை விவாதங்கள் டிசம்பர் 2 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதோடு அன்று மாலை வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்த ஏற்படாகியுள்ளது. வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படுவதையொட்டி பாராளுமன்றத்திலும் அண்டிய பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments