கமலினி செல்வராசன்… என்கிற பெயரை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சியின் தமிழ் நேயர்கள் மறந்து இருக்க முடியாது.
நாடு அறிந்த அறிவிப்பாளராக மாத்திரம் அன்றி இலக்கியவாதியாக, நடிகையாக பரிணமித்தவர். கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவியார். ஆனால் பொதுவாக இவரை எவரும் தற்போது காண முடிவதில்லை. கமலினிக்கு என்ன நடந்தது? என்பது இவரின் நேயர்கள், இரசிகர்க்ள், அபிமானிகள் பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
இவர் ஒரேயடியாக ஊமையாகி விட்டார் என்றால் யாரும் இலேசில் நம்பி விட மாட்டார்கள். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
30 வருடங்கள் ரூபவாஹினி தொலைக்காட்சியில் அறிவிப்பாளராக பணியாற்றிய இவர் 2009 ஆம் ஆண்டு திடீர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இவர் மன உளைச்சலுக்கு உள்ளானார். தொடர்ந்து நாளாக நாளாக இவரை ஞாபக மறதி ஆக்கிரமித்தது. இவரால் இப்போது பேச முடியாது. ஒரு காலத்தில் பேரழகியாக இருந்தவர். இப்போது அழகும் கெட்டு விட்டது. இவரால் சுயமாக செயற்பட முடியாது. இவருக்கு ஒரே ஒரு மகனை தவிர ஆதரவு என்று யாரும் இல்லை.
நாரஹன்பிட்டியவில் அன்டெர்சன் வீதியில் உள்ள தொடர் மாடி ஒன்றில் தாயும், மகன் அதிசயனும் வசித்து வருகின்றனர். மகனுக்கு வயது 30. 20 வருடங்களுக்கு முன் தந்தையை இழந்தவர். தாயை கூடவே இருந்து பராமரித்து வருகின்றார். தாயுடன் எப்போதும் கூடவே இருந்து ஆக வேண்டும் என்பதால் வெளியில் இவர் செல்ல முடியாத நிலை. பக்கத்து வீட்டுக்கு செல்வதானாலும் வீட்டை பூட்டி விட்டுத்தான் செல்ல வேண்டும். இதனால் வேலைக்கு செல்ல முடியாதவராக உள்ளார். வீட்டில் இருந்தபடி மொழிபெயர்ப்பு வேலைகள் சிலவற்றை செய்கின்றார். அவ்வப்போது தான் இவ்வேலைகளும் கிடைக்கின்றன.
கமலினியின் சகோதர்கள் பொருளாதார உதவி செய்வது உண்டு. சில வேளைகளில் கமலினியை கோவிலுக்கு அழைத்து செல்வார்கள். வேறு யாருடைய உதவியும் கிடையாது.
0 Comments