பொது நிகழ்ச்சியொன்றுக்கு கவர்ச்சியாக வந்த நடிகையை வளைத்து வளைத்து படமெடுத்த போட்டோகிராபரிடம் கேமராவை பிடுங்கி படத்தை அழித்து விட்டார் சம்பந்தப்பட்ட நடிகை. சோனியா செல்வராகவன் பிரிவுக்கு காரணமாக கூறப்படும் ஆயிரத்தில் ஒருத்திதான் அந்த நடிகை. ஒருசில நடிகைகளைத் தவிர பெரும்பாலான நடிகைகள் பொது நிகழ்ச்சிக்கு வருகிறோம்; பொதுமக்கள் பலர் வருவார்கள் என்ற நினைப்பு துளியளவும் இல்லாமல் அரைநிர்வாண கோலத்தில் மேடையேறுவார்கள்.
அரைகுறையாக ஆடையணிந்து மேடையில் போடப்பட்டிருக்கும்
இருக்கையில் மற்றவர்களைப் போல இருக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் அந்த நடிகையைச் சுற்றியே கேமரா பிளாஷ்கள் விழுந்து கொண்டிருக்கும். சங்கடத்தில் நெழியும் அந்த நடிகை, அடுத்து பங்கேற்கும் விழாவுக்காவது கலாச்சாரத்தை போற்றும் வகையில் நல்ல உடையணிந்து வருவாரா என்றால் அதுவும் இல்லை. அதைவிடவும் மோசமான, சிறிய உடையை அறிந்து வந்து வழக்கம்போல கேமரா பிளாஷ்களுக்கு பயந்து நெழிந்து கொண்டிருப்பார்.
இப்படி அரைகுறையாய் வருவானேன்; படம் எடுத்து விடுவார்களோ என பயந்து நெழிவானேன் என்று வெளிப்படையாகவே கூறும் சில தயாரிப்பாளர்கள் தங்கள் பட புரமோஷன் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு நாகரீகமான உடையணிந்து பங்கேற்குமாறு நடிகையிடம் கேட்டுக் கொண்ட சங்கதிகளும் நடந்துள்ளன.
இந்நிலையில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தன்னை படம் எடுக்கக் கூடாது என்று கூறி, தன்னை போட்டோ எடுத்த போட்டோகிராபரிடம் இருந்து கேமராவை பிடுங்கி, எடுத்த படங்களையெல்லாம் அழித்து விட்டார். ஆண்டிரியமான அந்த நடிகை சமீபத்தில், நடந்த எக்ஸ்மேன் பிரிமியர் ஷோவுக்கு வந்திருந்த அவரை ஒரு புகைப்படக்காரர் வளைத்து வளைத்து படமெடுத்துள்ளார். உடனே அவரை அருகில் அழைத்த நடிகை, என்னைக் கேட்காமல் எப்படி படமெடுக்கலாம் என கோபமாகக் கேட்டதுடன், கேமிராவைப் பிடுங்கி, அதிலிருந்த புகைப்படங்களை அழித்துவிட்டாராம்.
0 comments: