Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இந்து சகோதரரின் இறுதிச் சடங்குக்கு முழுதும் உதவிய பிரதேச முஸ்லிம்கள்.


இலங்கை மட்டுமன்றி இந்தியாவிலும் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சூழ்ச்சியின் காரணமாக அவ்வப்போது முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மை இன மக்களுக்கும் இடையே மோதல்கள் உருவாக்கப்படுகிறது.

எது நடந்தாலும் முஸ்லிம்கள் பல சந்தர்ப்பங்களில் தங்கள் செயல்கள் மூலம் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி வருவது அறிந்ததே.

இந்தியா, ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் இது.
ஹைதராபாத்தில் இருக்கும் இந்திரா நகரில் பாலராஜீ (வயது 60) என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் வேலையை முடித்து விட்டு, இரவில் படுத்தவர் காலையில் எழுந்திருக்கவில்லை. அவரை எழுப்பிய போது தான், அவர் இறந்து விட்டது தெரிந்தது.  அவரது இறுதிச் சடங்கை மேற்கொள்ளக்கூட பணம் இல்லாமல் அவரது மனைவியும், மகளும் தவித்தனர்.
இந்நிலையில், அவர்களது வீட்டை சுற்றியிருக்கும் முஸ்லிம்கள் பணம் கொடுத்து உதவினர். அத்துடன், அவர்களுக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லாத நிலையில், பாலராஜீவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அவ்வூரிலுள்ள இந்துக்கள் யாரும் வராததால், முஸ்லிம் இளைஞர்களே தகனம் செய்ய உடலை மயான இடத்திற்கு தூக்கிச் சென்றனர்.
இவர்களுக்கு முன், மகள் தீச்சட்டி தூக்கிச் சென்று தந்தைக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார்.  முஸ்லிம் இளைஞர்களின் உதவியுடன், இந்து மதத்தைச் சார்ந்த ஒருவருக்கு இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடந்திருப்பது அப்பகுதியில் நெகிழ்ச்சியுடன் பேசப்படுகிறது.

Post a Comment

0 Comments