வாழைச்சேனை, பொலன்நறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறி நடுவீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை பொலன்நறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் 23 வயதான மீரா மொஹூதீன் அன்வர் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் பின்னதாக லொறியின் சாரதி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இடம்பெற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 Comments