மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகமும், ஜப்பானியத் தூதரகமும் இணைந்து நடத்திய ஒகஸ்ரா இசை நிகழ்வு தீபாவளி தினமான நேற்று விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது.
நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் நடைபெற்ற இவ் இசை நிகழ்வில், அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா, கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, பிரிகேடியர் சுகத்த திலகரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேமகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த இசை நிகழ்வின் இறுதியில் ஜப்பானின் ஒகஸ்ரா இசைக் கலைஞரான கேய்கோ கொபயாசி கௌரவிக்கப்பட்டார்.
இவ் இசை நிகழ்ச்சியில் கொழும்பு வின்ட் ஒகஸ்டா இசைக் குழுவினர் பல்வேறு இசைப் பாடல்களை இசைத்து பார்வையாளர்களை மகிழ்வித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments: