இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடமேற்கு பகுதியில் உள்ள நியஸ்டன் நகரில் ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர் எனப்படும் இந்து ஆலயம் உள்ளது.
தீபாவளியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது மனைவி சமந்தாவுடன் புதிய பக்தராக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அங்கு வந்து சேர்ந்தார்.
அரக்கு நிற பட்டுப் புடவையில் சமந்தா கேமரூன் வட இந்திய குடும்பத் தலைவி போல் தோற்றமளித்தார். அவர்களுடன் இங்கிலாந்து எம்.பி.க்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளும் வந்திருந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் அங்கு தங்கியிருந்து தீபாவளி வழிபாட்டில் பங்கேற்ற டேவிட் கேமரூன் பக்தர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
அனைத்து மதங்கள், அனைத்து கலாசாராங்களை போற்றி பாதுகாக்கும் இங்கிலாந்துக்கு இங்கு வாழும் இந்துக்கள் அளித்து வரும் பங்களிப்பு சிறப்பானது என்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்.
எனது இதயத்தின் அடித்தட்டில் இருந்து உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிய அவர் பூசாரியிடம் பழங்களை தந்து பூஜை செய்து கண்மூடி வணங்கினார்.
0 Comments