Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

2014 ல் ஜனாதிபதி தேர்தல்!

மேல், ஊவா மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைத்து விட்டு. அடுத்த வருடம் (2014) தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதியின் கவனம் திரும்பியுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான அமைப்பினால் வழங்கப்படவுள்ள தலைமைப் பொறுப்பின் ஊடாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாக கிடைக்கும் நன்மதிப்பும், எதிர்க்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவையும் வாய்ப்பாகப் பயன்படுத்தி அவசரமாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவது மிகவும் சிறந்தது என ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த வருடம் மத்திபத்தில் இருந்து ஏற்படக் கூடிய பாரிய பொருளாதார சவால்களையும், காலம் கடத்துவதனால் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பதற்கான யோசனையொன்றுக்கான தீர்வினை எடுப்பதற்கு தள்ளப்படலாம் என்ற அடிப்படை காரணங்களே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடத்தில் நடத்துவதற்கு காரணமாகும்.

அத்துடன் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பாதகமான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டால், இலங்கை மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் நிற்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு காட்டுவதற்காகவும், அந்த அமர்வுகள் இடம்பெறும் காலக்கட்டத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது மிகவும் சிறந்தது என ஜனாதிபதியின் மனித உரிமைகள் தொடர்பான ஆலோசகர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலைமையில் அடுத்த வருடத்தில் தாம் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கு அரசியலமைப்பு ரீதியாக வாய்ப்புக்கள் இருக்கின்றதா என உயர் நீதிமன்றின் கருத்துக்களை பெற்றுக் கொள்ள ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments