சீனாவைச் சேர்ந்த சிகையலங்கார நிபுணர் ஒருவர், தலைமயிரை வெட்டுவதற்குப் பதிலாக ‘பொசுக்குவதன்’ மூலம் சிகையலங்காரம் செய்கிறார்.
வாங் வெய்பு எனும் இவர், கத்திரி போன்ற உலோகங்களை சூடாக்கி, அதன் மூலம் தலைமயிரை பொசுக்கி குட்டையாக்குகிறார்.
இந்த பாரம்பரிய சிகையலங்காரக் கலை ‘டஹோஜியா’ என அழைக்கப்படுகிறது. இந்த சிகை அலங்காரம் சுமார் மூன்று மாதங்களுக்கு நீடித்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
இம்முறையில் சிகையலங்காரம் செய்வதை இன்னும் கடைப்பிடிக்கும் மிகச் சிலரில் ஒருவராக 73 வயதான வாங் வெய்பு விளங்குகிறார்.
‘இந்த முறையில் சிகையலங்காரம் செய்யத் தெரிந்த கலைஞர்களுக்கு பற்றாக்குறை இல்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. பெரும்பாலும் வயதானவர்கள்தான் இப்போது எனது கடைக்கு வருகின்றனர். இன்னும் சிறிது காலத்தில் அவர்களும் வராமல் போகலாம்’ என்கிறார் வாங் வெய்பு.
0 Comments