சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னோடியாக முகையடீன் கல்வி அமைப்பினால் நடாத்தப்பட்ட பரீட்சை பெறுகளின் அடிப்படையில் அதில் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் அவர்களின் அதிகமானோர் தேசிய புலமைப்பரிசில் பரீட்சையில் அதனை ஒத்த புள்ளிகளைப் பெற்றார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 01.11.2013 வெள்ளிக் கிழமை பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் தலைமையில் நடைபெற்றதுடன் திறமை காட்டிய மாணவர்களுக்கான சான்றிதளினை தரம் 5 வகுப்பிற்கு கற்பித்த ஆசிரியர்களான திருமதி மன்சூர றஹீமா, திருமதி றிம்லான் அமீறா, திருமதி ஏ. பீ. பரீதா, எஸ். எல். மன்சூர் ஆகியோரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இம்முறை இப்பாடசாலையில் 41 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததுடன் மாவட்டத்தில் ஏ.எம். ஸிஹானுல் ஹனீன் 190 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார் என்பது குறிப்பித்தக்கதாகும். அவர் இப்பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
தகவல் ஏ.எம். தாஹாநழீம் – பிரதி அதிபர்
0 Comments