Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிரித்தானிய இளவரசர் சார்ள்சும் மட்டக்களப்பு வருகின்றார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள இலங்கையில் எதிர்வரும் 15ஆம்திகதி முதல் 17ஆம்தகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளின் வருகையை ஒட்டி பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பிரதிநிதிகள் குழுவில் பிரித்தானிய இளவரசர் சார்ள்சும் வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.  இருப்பினும் 30க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வருகை தருவார்கள் என்று தெரிகிறது.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மகாராணி எலிஸெபத்தின் பிரதிநிதியாக பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
இவர்களது இரண்டு நாட்களைக் கொண்ட மட்டக்களப்பு விஜயத்தின் போது, 13ஆம்திகதி மாலை மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பினரைச் சந்திப்பதுடன், மட்டக்களப்பு நகரை சுற்றியும் பார்வையிடுவர் அத்துடன் இரவு கலை நிகழ்வுகள் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவ மாணவிகளால் நிகழ்த்தப்படும்.
14ஆம்திகதி காலை தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் வாழும் மங்களமக, புல்லுமலை பிரதேசத்திற்கு விஜயம் செய்யும் பொதுநலவாய மாநாட்டுப்பிரதிநிதிகள் அரந்தலாவை பிரதேசத்தினையும் பார்வையிடுவர்.
அடுத்து, கரடியனாறில் விவசாயிகளுடன் கலந்துரையாடுவதுடன், பண்ணையையும் பார்வையிடுவர். பகலுணவையடுத்து சத்துருக்கொண்டான் சர்வோதயத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மிதிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கின்றனர்.
அதே நேரம், மாலையில் சுனாமியால் பாதிக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ள தமிழ், பறங்கிய மக்களின் வீடமைப்புத்திட்டங்களைப் பார்வையிடுவர்கள். அத்துடன் தன்னாமுனையிலுள்ள கைவினைப்பொருள்கள், பாரம்பரிய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்துவரும் உதவுங்கரங்கள் அமைப்பிற்கு விஜயம் செய்கின்றனர்.
கடந்த செப்ரம்பர் மாதத்தில் பிரித்தானிய இளவரசரின் மட்டக்களப்பு விஜயம் தொடர்பில் ஆராயும் வகையில், இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கின் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்தனர்.
இந்த குழுவினர் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசல், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கல்லடி திருச்செந்தூர் இந்து ஆலயம் மற்றும் நாவற்குடா விசேட தேவையுடையோர் பாடசாலை ஆகியவற்றைப்பார்வையிட்டுக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் பிரதிநிதிகள் இந்த இடங்களைப்பார்வையிடுவார்களா இல்லையா என அறிவிக்கப்படவில்லை.

Post a Comment

0 Comments