Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பண்டாரவளையில் பலநூறு அடி பஸ் பள்ளத்தில் வீழ்ந்தது; 9 பேர் பலி


பண்டாரவளை, பூனாகலை பகுதியில் இன்றிரவு  பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி பலநூறு அடி பள்ளத்தில் வீழ்ந்ததால் குறைந்தபட்சம்  9 பேர்  பலியானதுடன் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர் .
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் பண்டாரவளை மற்றும்  தியத்தலாவை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
 பலியானவர்களில் குறைந்தபட்சம் மூவர் பெண்கள் என என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.
காலநிலை சீர்கேடு மற்றும் பள்ளத்தின் நிலைமையை கவனத்தில் கொள்ளும் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் காயமடைந்தவர்களை தேடிக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்



Post a Comment

0 Comments