Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கம்பியாறு பாலத்தின் வேலைகள் துரிதம்

0

மழைக்காலம் ஆரம்பித்து;ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மிகவும் பிரசித்திபெற்ற ஆறாகவுள்ள கம்பியாறுக்கு குறுக்காக பாலம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமிய வீதிகள் மற்றுமு; பாலங்கள் அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 29.37 மில்லியன் மதிப்பீட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம்திகதி இப் பாலம் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

வெள்ள அனர்த்த காலங்களில் இந்த ஆறின் ஊடாக வெள்ளம் அதிகளவில் பாய்வதனால் மண்டூரில் இருந்து காக்காச்சிவட்டை, ஆனைகட்டியவெளி, பலாச்சோலை,நெடியவட்டை,சின்னவத்தை மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கடந்த காலத்தில் மக்கள் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் விடுத்தவேண்டுகோளின்பேரில் இது தொடர்பிலான செயற்றிட்ட அறிக்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் இந்த பாலம் அமைப்பதான நடவடிக்கையெடுக்கப்பட்டது.

இந்த பாலத்தின் ஆரம்ப பணிகள் அண்மையில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்தப்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து நீர் பாய்ந்து கொண்டிருக்கும் இக் கம்பியாற்றினைக் கடப்பதற்கு வேறு எந்த வழியும் இல்லை என்பதனால் நீரில் நீந்தியே மக்கள் தங்களது அன்றாட தேவைகளi நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இப்பாலம் நிறைவடைகின்ற நிலையில் இவ்வாறான போக்குவரத்துக்களும் ஆபத்துக்களும் இல்லாமல் போகும் என்பது இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதாகும்.

Post a Comment

0 Comments