ஆஸ்திரேலிய கிரீன்ஸ் செனட் உறுப்பினர் லீ ரியானோன் சமீபத்தில் இலங்கை சென்றிருந்தபோது, தமிழர்கள் பகுதிக்குச் சென்றதாக கூறி அவரை இலங்கை அதிகாரிகள் கைது செய்து, விசாரணைக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பினர். அந்த பெண் செனட் உறுப்பினர் சிட்னி திரும்பிய பின், அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என பிற நாடுகள் கண்காணிப்பதை இலங்கை அரசு விரும்பவில்லை; அங்கு நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து கட்டாயம் விசாரணை நடத்த வேண்டும்; மனித இனத்திற்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அங்கு தொடர்ந்து கொண்டு தான் உள்ளன; அதற்கு மிக வலுவான ஆதாரங்களும் உள்ளது; ஆனால் அவை அனைத்தையும் மூடி மறைக்க இலங்கை அரசு நினைக்கிறது.
இவ்வாறு லீ ரியானோன் தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட்டை இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்த கொள்ளக் கூடாது என வலியுறுத்தி உள்ளார். கனடா அரசைப் போன்று ஆஸ்திரேலியாவும் இலங்கை மாநாட்டை திடமாக புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments