Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆனையிறவில் அஞ்சலி செலுத்திய கனேடியப் பிரதிநிதிகள்! - அரசாங்கத் தரப்புக்கு அதிருப்தி.

போரில் உயிரிழந்தவர்களுக்கு கனேடிய பிரதிநிதிகள் நேற்று ஆனையிறவுப் பகுதியில் அஞ்சலி செலுத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொமன்வெல்த் மாநாட்டுக்கு வருகை தந்த கனேடிய பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ்.ஆயர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

சந்திப்பின் பின்னர் ஏ - 9 வீதியின் வழியாக கிளிநொச்சி செல்லும் வழியில் ஆனையிறவில் போர்வெற்றி நினைவுத்திடல் அமைந்துள்ள பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் உள்ளே சென்று, போரில் உயிரிழந்தவர்களுக்காக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி செலுத்திய பின்னர் கொண்டு வந்திருந்த மலர்வளையத்தினை தம்கூடவே எடுத்துச் சென்றனர்.
இது பாதுகாப்பு வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து, கொமன்வெல்த் அமைப்பு விளக்கமளிக்க வேண்டும் என்று பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments