செனல் - 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே வடக்கு நோக்கிப் பயணித்த ரயிலை அனுராதபுரத்தில் வழிமறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டமென கெலும் மெக்ரே தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
11.04 AM - ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயிலை இடைமறித்திருக்கிறார்கள்.
11.12 AM - நாம் இந்த ரயிலில் பயணிக்கும் செய்தியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு யார் கூறினார்கள்?
11.42 AM - ரயில் முன்னோக்கிச் செல்ல முடியாதபடி ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் பாதையை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
12.11 PM - நூற்றுக்கணக்கானோர் தடையாக இருக்கிறார்கள்.
12.34 PM - சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் வருகை தந்தார். நாம் செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தடையாக இருப்பதால் மீண்டும் கொழும்புக்குத் திரும்புமாறு கூறினார்.
12.36 PM - அடுத்துள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
1.24 PM - நாம் ரயிலிலிருந்து இறங்கிவிட்டோம். கருத்து சுதந்திரத்துக்கும் பொதுநலவாயத்தின் பெறுமதிக்கும் என்னவாயிற்று?
2.40 PM - தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இருக்கிறோம்.(விருப்பத்தின்பேரில் அல்ல)
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» வடக்கு நோக்கி கெலும் மெக்ரே பயணித்த புகையிரத வண்டியை இடைமறித்து ஆர்ப்பாட்டம்!
வடக்கு நோக்கி கெலும் மெக்ரே பயணித்த புகையிரத வண்டியை இடைமறித்து ஆர்ப்பாட்டம்!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: