Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புன்னாலைக்கட்டுவனில் பெண் கடத்தல் - பிந்திய செய்தி

செவ்வாய்க்கிழமை (13.11.2013) மாலை 6.30 மணியளவில் வானில் வந்த இனம் தெரியாதவர்களினால்
இளம் பெண் ஒருவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது .
புன்னாலைக்கட்டுவன் பலாலி வீதியில் அமைந்துள்ள ஆயர் கடவைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் மோட்டார் சையிக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் அந்த வழியால் வந்த இளம் பெண் ஒருவரை மறித்து கதைத்தக்கொண்டு நின்றதாகவும் அந்த நேரத்தில் ஒரு வான் வந்து குறிப்பிட்ட இளம் பெண்னை பலாத்காரமான முறையில் ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது . இதனைத் தொடர்ந்து வானில் வந்தவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சையிக்கிளில் வந்த இளைஞரும் தப்பிச் சென்றுள்ளார் .
குறிப்பிட்ட இளம் பெண் கடத்தப்பட்ட இடத்தில் பெண்ணினுடைய சையிக்கிள் மற்றும் கைப்பை கையடக்கத் தொலைபேசி என்பனவும் அநாதரவான நிலையில் காணப்படுகின்றது .
சுன்னாகம் பொலிசாருக்கு அப் பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்திற்கு பொலிசார் சென்று விசாரனைகளை மேற்க் கொண்டுள்ளார்கள் .

Post a Comment

0 Comments