வாய் மூடி பேசவும்’ படப்பிடிப்பின் போது நடிகை நஸ்ரியா விபத்தில் சிக்கினார்.
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தமிழில் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘வாய் மூடி பேசவும்’. ‘காதலில் சொதப்புவது எப்படி’ படப்புகழ் பாலாஜி மோகன் இயக்கும் இதில் நஸ்ரியாதான் நாயகி.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மூணாறு பகுதியில் நடந்து வந்தது. அங்கு, நஸ்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் பாலாஜி மோகன் படமாக்கி கொண்டிருந்தார். கதைப்படி நஸ்ரியா, டூவீலரில் வேகமாக வந்து திரும்ப வேண்டும்.
அந்த மாதிரியான காட்சியில் நடித்தபோது நஸ்ரியா எதிர்பாராத விதமாக சறுக்கி விழுந்தார்.
இதில் அவருக்கு சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அவரை மீட்டு படக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
0 comments: