சுவிஸ் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் சர்வோதயம் ஊடாக உரிமைகள் மற்றும் உற்சாகமான செயலுருவாக்கல் திட்டத்தின் ஊடாக வவுணதீவு பிரதேசத்தில் சிங்கள மொழி வகுப்பை நிறைவு செய்தவர்களுககான சான்றிதழ் வழங்கல் நிகழ்வு நேற்றைய தினம் மாலை நடைபெற்றது.
கடந்த மூன்று மாத காலமாக நடைபெற்று வந்த இந்த சிங்கள வகுப்புக்கான சான்றிதழ் வழங்கல்மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் வி. தவராசா மண்முனை மேற்கு பிரதேச சபை செயலாளர் து. விஜயகுமார், சர்வோதய கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.ஏ.கரீம், சர்வோதய தலைமை காரியாலயத் திட்ட இணைப்பாளர்கள் கேமாமாலி பெரேரா மற்றும் ஜெரோமி செல்லர் அத்துடன் சர்வோதய சமூக வேலைத்திட்ட இணைப்பாளரஎஸ்.மதனகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் மொழி வகுப்பானது கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய மொழியை முன்னிலைபடுத்தி இவ் வகுப்பு இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments